Skip to main content

“இழப்பீடு போதாது; ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்” - பாமகவின் அன்புமணி வலியுறுத்தல்

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

'Compensation is not enough; Rs. 50 thousand should be given' - Anbumani of Bamagawa insists

 

காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிபந்தனைக்குட்பட்டு ஏக்கருக்கு ரூ.8000, பயறு வகைகளுக்கு ரூ.1200 இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கான இந்த இழப்பீடு அதன் உரச் செலவுகளுக்கும், பயறுக்கான இழப்பீடு விதை செலவுகளுக்கும் கூட போதாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்வதற்கு ரூ.46,635 செலவாகும் என தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வேளாண் பல்கலைக்கழகமே மதிப்பீடு செய்துள்ள நிலையில், அதில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவாக இழப்பீடு வழங்குவது நியாயமல்ல. இதனால் உழவர்களுக்கு பயனில்லை. 33%க்கும் கூடுதலாக மகசூல் இழப்பு ஏற்பட்ட நெற்பயிர்களுக்கு மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது அநீதி.  

 

பேரிடர் மேலாண்மை விதிகள் தான் இந்த அநீதிக்கு காரணம் என்றால் அவற்றைத் திருத்தியமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிபந்தனையின்றி ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ.50,000 வீதமும், பயறு வகைகள் மற்றும் உளுந்துக்கு ஏக்கருக்கு ரூ.15,000 வீதமும் இழப்பீடு வழங்க வேண்டும். அதன் மூலம் காவிரி பாசன பகுதி உழவர்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்