Skip to main content

 ’சீனா,ஜப்பான் போன்ற நாடுகள் வளர்ச்சி அடைய அந்நாடுகளில் ஊழல் இல்லாததே காரணம்’-பன்வாரிலால் புரோகித்

Published on 20/03/2018 | Edited on 20/03/2018
panvarilal

 

நாடு வளர்ச்சி பாதைக்கு செல்ல வேண்டும் என்று மகாத்மா காந்தியின் கனவு தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளதாகவும், அதற்கு காரணமான ஊழல் தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாக தமிழக அளுநர் பன்வாரிலால் புரோகித் குற்றம்சாட்டினார்.

 

 கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் புத்தாக்கம் செய்யப்பட்டுள்ள மகாத்மா காந்தி மைய நூலகத்தையும், ஞான சமை என்னும் தியான மையத்தையும் திறந்து வைத்து பேசிய அவர், அனைவருக்கும் காலை வணக்கம், எப்படி இருக்கீங்க? நீங்கள் செளக்கியமா? இனிமையான மொழி தமிழ் எனவே தமிழை விரும்புகிறேன் என தனது உரையை தமிழ் மொழியில் துவக்கினார். பணம், புகழ், கற்றல், ஆகியவற்றைக் காட்டிலும் ஒழுக்கம் வாழ்வின் அடிப்படையாகும் என்று  சுவாமி விவேகானந்தர் கூறியது போல ஒழுக்கத்தை அடிப்படியாக மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டவர், மாணவர்கள் தங்களிடம் பழகுபவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் பழக்கத்தை முதலில் வீட்டில் உள்ள அம்மாவிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்தார். 

 

தியானம் மூலம் அசுத்தங்களை மனதில் இருந்து அகற்றுவிட்டு தூய்மை அடைவதால்  மாணவர்கள் அனைவரும் தியானம் செய்வதை நாள்தோறும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சீனா,ஜப்பான் போன்ற நாடுகள் வளர்ச்சி அடைய அந்நாடுகளில் ஊழல் இல்லாததே காரணம் என சுட்டிக்காட்டியவர், தமிழகம் உயர்கல்வி துறையில் சிறந்து விளங்குவதாக நன்றி,வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை முடித்துக் கொண்டார். 

 

இதையடுத்து, கோவை சித்ரா அருகிலுள்ள தனியார் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற ஆளுநர், மருத்துவர்கள் வெளிப்படையாக செயல்படவும், எந்தவித ஒளிவு மறைவுமின்றி மருத்துவமனை இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக கூறியவர், எவ்வளவு வேண்டுமானாலும் சிகிச்சைக்கு பணம் பெறலாம் என்றாலும், சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும் என்று சாடியவர், அமைச்சர்கள் ஊழல் வாதிகளாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். 

 

மத்திய அரசின் காப்பீடு திட்டத்தால் தனியார் மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவது அதிகரித்து வருவதாக கூறியவர், மக்களுக்கான மருத்துவத்துறையில் நவீன தொழில்நுட்பத்தை அனைத்து நிலைகளிலும் கொண்டு வர வேண்டும் என்று நன்றி, வணக்கம் என உரையை முடித்துக்கொண்டார். இந்த விழாவின் துவக்கத்தில் தேசிய கீதம் இசைத்த பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டும், விழாவில் முடிவிலும் தேசிய கீதம் 2ஆம் முறையாக இசைக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய பிரபல இயக்குநர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
The famous director ss rajamouli caught in the earthquake in Japan

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரைப்பட இயக்குநரான ராஜமெளலி, பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் படங்களுக்கு பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குநராக மாறியுள்ளார்.

அவரது அடுத்த படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இப்படத்திற்கான கதை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ராஜமெளலி, தனது மகன் கார்த்திகேயா மற்றும் தனது குழுவுடன் தற்போது ஜப்பானில் இருந்து வருகிறார். அங்கு ஆர்.ஆர்.ஆர் படத்திற்கான ஸ்பெஷல் ஸ்கிரீனிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த நிகழ்வில், ராஜமெளலி தனது மனைவியுடன் பங்கேற்று பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார்.

ஆர்.ஆர்.ஆர் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கிற்கு பிறகு, 83 வயது மூதாட்டி ஒருவர், ராஜமெளலிக்கு 1,000 ஓரிகமி கிரேன்களை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்து ராஜமெளலி தனது எக்ஸ் தளத்தில், “ஜப்பான் நாட்டு மக்கள், ஓரிகமி கிரேன்களை உருவாக்கி, தங்கள் அன்புக்குரியவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஆரோக்கியத்திற்காக பரிசளிக்கிறார்கள். ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்த இந்த 83 வயது மூதாட்டி, ஓரிகமி கிரேனை பரிசாக அளித்து எங்களை ஆசிர்வதித்தார். இது விலைமதிப்பில்லாத பரிசு” என்று பதிவிட்டு புகைப்படத்தை வெளியிட்டார். இது தொடர்பான புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

The famous director ss rajamouli caught in the earthquake in Japan

இந்த நிலையில், இன்று அதிகாலை நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும், அப்பாவுடன் 28வது மாடியில் என்ன செய்வதன்று தெரியாமல் இருந்ததாகவும், ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார். இது குறித்து ராஜமெளலி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “ஜப்பானில் இப்போது பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. நாங்கள் 28வது மாடியில் இருந்ததால், தரை மெதுவாக நகர ஆரம்பித்தது. இது நிலநடுக்கம் என்பதை உணர எங்களுக்கு சிறிது நேரம் பிடித்தது. நான் பயத்தில் இருந்தேன். ஆனால் சுற்றியிருந்த அனைத்து ஜப்பானியர்கள் எல்லாம், மழை பெய்ய ஆரம்பித்தது போல் அசையவில்லை” என்று கூறி தனது ஸ்மார்ட் வாட்சில் நிலநடுக்கத்திற்கான எச்சரிக்கை குறுஞ்செய்தியையும் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.