Skip to main content

ரஃபேல் பேரத்தை வெளியிட்டால் பத்திரிகைகளை மிரட்டுவதா?

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

'தி ஹிண்டு' நாளிதழ் ரஃபேல் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டது குறித்து மத்திய அரசு வழக்கறிஞர் கூறியிருக்கும் கருத்துகள் ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்தும் முயற்சி என்றும், 1923 ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அரசு ரகசிய காப்புச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

 

hindu ram



“ஊடகங்களுக்கு எதிராக அரசு ரகசியக் காப்பு சட்டத்தை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கதுடன் பத்திரிகையாளர்கள் தங்களுக்கு செய்தி கொடுப்பவர்களை காட்டிக்கொடுக்கும்படி கேட்பதாகும். இத்தகைய மிரட்டல்கள் ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்துவதுடன், ரஃபேல் விமான பேரம் தொடர்பான செய்திகளை வெளியிடும் சுதந்திரத்தையும் அது தொடர்பான விமர்சனங்களையும் தடுக்கும் முயற்சியாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம். ஊடக சுதந்திரத்தை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதில் இருந்து அரசு விலகியிருக்க வேண்டும்” என்று இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கூறியுள்ளது.
 

editors guild of india



பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, இண்டியன் விமன்ஸ் பிரஸ் கார்ப்ஸ், பிரஸ் அசோசியேசன் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகத்தின் நான்காம் தூண் ஆகிய ஊடகங்கள் அரசாங்கத்தையும் பொதுநலனுக்கு எதிராவற்றையும் கேள்வி கேட்கவும், செய்திகள் வெளியிடவும் கடமையுள்ளவை. இத்தகைய கடமையை அரசின் அதிகாரமிக்க அதிகாரிகள் முடக்க நினைப்பது துரதிர்ஷ்டவசமானது. பத்திரிகைகள் வெளியிடும் செய்திகள் குறித்து விளக்கம்பெற அவதூறு வழக்குகளே போதுமானது. அரசு ரகசியக் காப்பு சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளன.

 

சார்ந்த செய்திகள்