மத்தியில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.தமிழகத்த்தில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தமிழகத்தில் ஒரு தொகுதி மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.தமிழகத்தின் துணை முதலவர் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.இதனால் அதிமுக கூட்டணிக்கு ஒரு இடம் மட்டுமே தமிழகத்தில் கிடைத்துள்ளது.தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியுள்ளது.
மேலும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கூட்டணி கட்சிகள் அனைத்தும் தோல்வியை சந்தித்துள்ளது.இந்த நிலையில் தமிழக்தில் இருந்து பாஜக ஸ்டார் வேட்பாளர்களில் ஒருவர் மாநிலங்களவை எம்.பி யாக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தமிழகத்தில் அதிமுக,பாஜக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் என்பதால் அவருக்கு இணை அமைச்சர் பதவி கொடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.