நாடளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற இருக்கிறது. முதல்கட்டமாக ஆந்திரா, ஒடிஷா, சிக்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றது.
வேட்பாளர்களும், அவரவர் தொகுதியில் வாக்குறுதிகளை அள்ளிவீசி வருகின்றனர். ஆனால் இங்கு ஒரு வேட்பாளர் தனது தொகுதிக்குள் தன்னை அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கிறார்.
சவுமித்ர கான், இவர் மேற்கு வங்கம், பிஷ்னுபூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்குகிறார். இவர் முன்னாள் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. ஆவார். அப்போது மாணவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக்கூறி ஏமாற்றியது உள்ளிட்ட பல வழக்குகள் இவர்மீது இருக்கிறது. பிறகு அவர் பாஜகவிற்கு மாறினார். அதன்பிறகு திருட்டு மணல் வழக்குகளில் சிக்கினார். இந்த மாதிரியான குற்றங்களை செய்ததால் அவரை தொகுதி பக்கமே வரக்கூடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தவிட்டது, கடந்த மார்ச் மாதம் இந்த தடையை மேலும் 6 வாரங்களுக்கு நீட்டித்தது.
தொகுதிப்பக்கமே வரக்கூடாது என நீதிமன்றம் கூறியவரை மீண்டும் அதே தொகுதியின் வேட்பாளராக அறிவித்தது பாஜக. ஆனால், நீதிமன்றத்தடை இருப்பதால் வேட்புமனு தாக்கல் செய்யக்கூட இவரால் தொகுதிக்குள் செல்ல முடியவில்லை. தொகுதிக்கு சென்று மனுத்தாக்கல் செய்யவும், பிரச்சாரம் செய்யவும் அனுமதி அளிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அனுமதியளித்தது. மேலும், இதற்கேற்ப தடையில் மாற்றம் செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடும்படியும் உத்தரவிட்டுள்ளது.