Skip to main content

அமைச்சர் கே.என். நேரு திறந்துவைத்த சட்டமன்ற அலுவலகம்..! 

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

Assembly office opened by Minister K.N. Nehru


2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தது. இதில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் வெற்றிபெற்றார். அதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு சட்டமன்ற அலுவலகம் இன்று (16.06.2021) திறக்கப்பட்டது. 

 

திருச்சி மெயின்கார்டு கேட் காமராஜர் வளைவு அருகில் அமைக்கப்பட்டுள்ள கிழக்கு சட்டமன்றத் தொகுதி அலுவலக திறப்பு விழாவில், கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் முன்னிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு அலுவலகத்தை திறந்துவைத்தார். 

 

அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு அருகில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார். இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர்கள் மதிவாணன்,  ராஜசேகர்,  பாலமுருகன் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், வட்டக் கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்