Skip to main content

டி.டி.வி. தினகரனுக்காக உண்டியல் பணத்தை செலவு செய்த 8 வயது சிறுமி...

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

ddd

 

2021 சட்டமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது. கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அமமுக தலைமையில், கூட்டணி அமையும். அதுதான் முதன்மை அணியாக இருக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

 

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புபவர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்ப மனு அளிக்கலாம். தமிழ்நாட்டில் போட்டியிட விரும்புபவர்கள் 10 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிட விரும்புபவர்கள் 5 ஆயிரம் ரூபாயும் விருப்ப மனுவுடன் கட்டணம் கட்ட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 

அதன்படி, அமமுகவினர் அமமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்து வருகின்றனர். இந்தநிலையில், சென்னை ஆர்.கே.நகரைச் சேர்ந்த 8 வயது சிறுமி லோகிதா, ஆர்.கே.நகர் தொகுதியின் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் டிடிவி தினகரன் மீண்டும், ஆர்.கே.நகர் தொகுதியில் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு தாக்கல் செய்தார். விருப்ப மனு அளிக்கும்போது, அமமுகவால் அறிவிக்கப்பட்ட கட்டணத்தைக் கட்ட தனது உண்டியலில் சேர்த்துவைத்த சில்லறைக் காசுகளை எடுத்துக் கட்டினார். 


 

 

சார்ந்த செய்திகள்