Skip to main content

தேசியக் கட்சிகளுடன் கூட்டணியா? - எடப்பாடி பழனிசாமி பதில்

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
Alliance with National Parties?; Edappadi Palaniswami Answer

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்தும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. 

இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (18-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி இல்லை. தேர்தலில் எங்களுக்கு சிறப்பான கூட்டணி அமையும். தமிழக அரசியல் கட்சிகளில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு வரும் கட்சிகள் குறித்து விரைவில் தகவல் தெரிவிக்கப்படும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்