தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
காலை 01.00 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 146 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 87 சட்டமன்றத் தொகுதிகளிலும், மநீம கூட்டணி 1 சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.
கோபிசெட்டிபாளையம்:
மணிமாறன் (திமுக): 28,609
செங்கோட்டையன் (அதிமுக): 34,779
6,170 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார் அதிமுக வேட்பாளர்
பெருந்துறை:
பாலு (திமுக): 33,651
ஜெயக்குமார் (அதிமுக): 40,522
தோப்பு வெங்கடாசலம் (சுயேச்சை): 4353
6,871 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார் அதிமுக வேட்பாளர்.
பவானிசாகர்:
சுந்தரம் (இ.கம்யூனிஸ்ட்): 44,552
பன்னாரி (அதிமுக): 54,852
10,300 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார் அதிமுக வேட்பாளர்.