Skip to main content

செய்தியாளர் கேட்ட கேள்வியால் கோபமான நடிகை ஓவியா!

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

தமிழ் சினிமாவில் விமல் நடித்த களவாணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஓவியா. சமீபத்தில் 90எம்.எல் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் இடத்தை பிடிக்காவிட்டாலும் பிக் பாஸ் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பெரும்  ரசிகர் கூட்டத்தையே தனக்கென்று பெற்றவர் நடிகை ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடிகர் ஆரவுடன் ஏற்பட்ட காதலால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர முடியாமல் வெளியேறினார். 
 

actress



இந்நிலையில், செய்தியாளர்கள் சமீபத்தில் ஓவியாவிடம் கமல், ரஜினி அரசியல் குறித்து சமீபத்தில் கேள்வி எழுப்பினர். அந்த கேள்வியால் நடிகை ஓவியாவிற்கு கடும் கோபத்தை உருவாக்கியது. அப்போது அது குறித்து பதில் கூறாமல் ஓவியா சென்றுவிட்டார். அதன் பின்பு தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அரசியல் சார்பற்ற நடிகர், நடிகைகளிடம் அரசியல் குறித்து கேள்வி கேட்பதை செய்தியாளர்கள் தவிர்க்க வேண்டும். இந்த கேள்விகளை பொது மக்களிடம் கேட்டால் எதிர்பாராத பதில்கள் கிடைக்கும்." என்று தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி பதிவு போட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்