Skip to main content

ஆம்புலன்ஸ் மறுப்பு; மனைவி உடலை தோளில் சுமந்துசென்ற கணவர்! - (வீடியோ)

Published on 08/05/2018 | Edited on 08/05/2018

இறந்தவர்களின் சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் மறுக்கப்படும் அவலத்திற்கு முடிவு வந்ததாக தெரியவில்லை. இதனால், உயிரிழந்தவரின் சடலத்தை அவரது உறவினர் தூக்கிச் செல்லும் காட்சிகளும் தொடர்ந்து பொது சமூகத்தை சோகத்தில் ஆழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றன.

 

UP

 

அந்த வகையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் படவுனி பகுதியில் உள்ளது பொது மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் கோரியிருந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. 

 

இதையடுத்து மனமுடைந்த அந்தப் பெண்ணின் கணவர், அவரது உடலை தனது தோளில் சுமந்துகொண்டு அழுதபடி நடந்துசென்றார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். 

 

 

இதுகுறித்து மூத்த சுகாதார அதிகாரி கூறுகையில், ‘மருத்துவமனை நிர்வாகத்திடம் இறந்தவர்களின் உடலை எடுத்துச்செல்ல இரண்டு ஆம்புலன்ஸ்கள் இருக்கின்றன. தேவைப்படும் போது அவை பயன்பாட்டுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. சம்மந்தப்பட்ட வீடியோவை ஊடகங்களின் வாயிலாகதான் பார்த்தேன். தவறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், இது கண்டனத்திற்குரியது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்