Skip to main content

மனிதாபிமானம் வெறுப்புணர்ச்சியால் விரட்டப்பட்டுவிட்டது-மோடியை கண்டித்த ராகுல்  

Published on 23/07/2018 | Edited on 23/07/2018
rahul gandhi

 

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரு பசுமாடுகளை கடத்தி செல்வதாக கூறி தாக்கப்பட்டனர். தாக்கப்பட்டதில் ஒருவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து ஓட, மற்ற இருவர் பலமாக தாக்கப்பட்டனர். அதில் ஒருவர் மரணமே அடைந்துவிட்டார். இதற்கு பசுகாவாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எவ்வளவு காரணமோ, அதேபோல காவலர்களுக்கும் இதில் பங்கு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

 

தாக்கப்பட்ட இசுலாமிய இளைஞர்களை முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லாமல், அந்த பசுமாடுகளை முதலில் பாதுகாப்பகத்தில் விட்டுவிட்டு பொறுமையாக நிதானமாக அழைத்து சென்றதில் காயமடைந்த இருவரில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்பே இறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

இச்சம்பவத்திற்கு பல்வேறு அமைப்புகளில் இருந்து கண்டம் தெரிவித்திருந்த வகையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று ட்விட்டரில் கடுமையாக கண்டித்துள்ளார்," ஆல்வாரில் வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்ட ரக்பர் கானை ஆறு கிலோமீட்டரில் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மூன்று மணிநேரம் காவலர்கள் எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த தாமதத்தால் தான் ரக்பர் கான் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

ஏன் இந்தத் தாமதம்?, போலீஸால் தங்கள் வாகனத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடிய ரக்பர் கானை வைத்துக்கொண்டே ஹோட்டலில் தேநீர் குடித்துள்ளனர். இந்தத் தாமதத்தால்தான் அவர் உயிரிழந்துள்ளார்.

 

இதுதான் மோடியின் காட்டுமிராண்டித்தனமான புதிய இந்தியா. இந்த புதிய இந்தியாவில், மனிதாபிமானம் வெறுப்புணர்ச்சியால் விரட்டப்பட்டுவிட்டது. மக்கள் நசுக்கப்பட்டுக் சாகடிக்கப்படுகின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.      

       

சார்ந்த செய்திகள்