Skip to main content

விருப்பம் தெரிவித்தால் மட்டுமே அனுமதி... வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்...!

Published on 16/02/2019 | Edited on 16/02/2019


வாட்ஸ் ஆப் செயலியில் புதிதாக ஒரு அப்டேட் வரப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வாட்ஸ் ஆப் நிறுவனம், குரூப் கால் செய்துகொள்ளும் வசதியை அறிமுகம் செய்தது.  இந்த நிலையில் தற்போது புதிய குரூப்பில் இணைவதற்கும் அதில் அட்மின் ஆகுவதற்கும் புதிய அப்டேட்டை அந்நிறுவனம் கொண்டுவரவுள்ளது. 
 

 

whatsapp

 

இந்த குரூப் கால் மூலம் வீடியோ மற்றும் ஆடியோ கால் என வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்ப பேசிகொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தது. மேலும் ஒரு முறை குரூப் காலில் நான்கு பேர் இணைந்திருக்கலாமெனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது புதிய குரூப்பில் இணைவதற்கும் அதில் அட்மின் ஆகுவதற்கும் புதிய அப்டேட்டை அந்நிறுவனம் கொண்டுவரவுள்ளது. 

 


இந்த அப்டேட் மூலம் நமக்கு தேவையற்ற அல்லது இருக்க விரும்பதா குரூப்களில் நம்மை நம் அனுமதியின்றி சேர்க்கவும் முடியாது. நம் அனுமதியின்றி அந்த குரூப்பின் அட்மினாகவும் ஆக்க முடியாது. இந்த அப்டேட் மூலம் நாம் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே அந்த குரூப்பில் இணையவோ அல்லது அந்த குரூப்பிற்கு அட்மினாகவோ ஆக முடியும். 

 

வாட்ஸ் ஆப் செட்டிங்சில் உள்ள பிரைவசியில் குரூப்ஸ் என்ற ஆப்ஷன் கொடுக்கப்படும். இதில் யாரெல்லாம் உங்களை ஒரு குரூப்பில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வியுடன் மூன்று ஆப்ஷன்கள் இருக்கும். அதில் யார்வேண்டுமெனாலும் (Everyone), என் நன்பர்கள் மட்டும் (My contacts) மற்றும் யாரும் கூடாது (Nobody) என்று இருக்கும். இதில் இறுதியாக இருக்கும் Nobody ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால், யாராக இருந்தாலும் உங்களது அனுமதிக்கு பின்னரே குரூப்பில் சேர்க்க முடியும். அப்படி உங்களிடம் அனுமதி கேட்டு நீங்கள் எந்த பதிலும் தராதபட்சத்தில் அவர்களின் அனுமதி கோரிக்கை 72 நாட்கள் வரை மட்டுமே இருக்கும். 

 

 

சார்ந்த செய்திகள்