Skip to main content

கடைசி நாளில் முடங்கிய இணையப் பக்கம்; அதிருப்தியில் மக்கள்!

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

aadhaar - pan card link

 

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் வருமான வரி குறித்த தகவல்களில் செய்யப்படும் முறைகேடுகளை தடுப்பதற்காக 'ஆதார்' எண்ணுடன் 'பான்' எண்ணை இணைக்க வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் இரண்டையும் இணைப்பதற்கான காலக்கெடு முடிவடைவதாக இருந்த சூழலில், 2020 மார்ச் 31 வரை இந்த காலக்கெடு நீடிக்கப்பட்டது. அக்காலக்கெடு முடிவடைய இருந்த நிலையில், ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நீடித்த மத்திய அரசு, அதற்கு இன்றே (31.03.2021) கடைசிநாள் என அறிவித்திருந்தது.

 

மேலும் இன்றைய நாளுக்குள் ஆதரோடு, பான் எண்னை இணைக்காவிட்டால் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்தநிலையில், இன்று மக்கள் பலர் ஆதரோடு, பான் எண்ணை இணைக்க முயன்ற நிலையில், அதற்கான இணையப் பக்கம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பலர், சமூகவலைதளங்களில் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்