Skip to main content

பசுக்களுக்கு 24 மணிநேர ஆம்புலன்ஸ் சேவை - அடுத்த மாதம் தொடங்கும் உத்தரப்பிரதேசம்!

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

cows

 

உத்தரப்பிரதேச மாநில அரசு, பசுக்களுக்கான 24 மணிநேர ஆம்புலன்ஸ் சேவை அடுத்த மாதம் செயல்பாட்டிற்கு வருவதாக அறிவித்துள்ளது. இந்த 24 மணிநேர ஆம்புலன்ஸ் சேவையில் முதற்கட்டமாக 515 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படவுள்ளன. மேலும் இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் கால் சென்டர் அமைக்கப்படவுள்ளது.

 

கால் சென்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட 15 நிமிடங்களுக்குள் இந்த ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து, பசுக்களைக் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆம்புலன்சிலும் ஒரு மருத்துவர், ஒரு மருத்துவ ஊழியர் நியமிக்கப்படவுள்ளனர்.

 

உத்தரப்பிரதேசத்தின் பாரபங்கி மாவட்டத்தில் பரிசோதனை செய்யப்பட்ட இந்த திட்டம், சாதகமான முடிவுகளைத் தந்ததாகக் கூறப்படுகிறது. அதனையடுத்து இந்த திட்டம் மாநில முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்