Skip to main content

நோட்டெல்லாம் போதும், கிரெடிட் கார்டுதான் வாழும்? -இந்தியாவில் மேஸ்ட்ரோ கார்டுகள்  

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
credit card

 

2016 நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவித்தது. அதற்கு பதிலாக வெளியிடப்பட்ட புதிய 2000 மற்றும் 500 ரூபாய்களும் போதிய அளவில் புழக்கத்தில் வராததால் மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்கள். இந்தத்  தட்டுப்பாடைக் குறைக்க மத்தியஅரசு, மக்களை பணமில்லா பரிவர்தனையை நோக்கி நகரச் சொல்லியது. அதன் மூலம் பொட்டிக்கடை முதல் பல்பொருள் அங்காடி வரை அனைவரும் ஸ்வைப்பிங் எந்திரத்தை வாங்கினார். பிறகு வெகுஜனம் மக்கள் பணமில்லா பரிவர்த்தனையை பின்பற்றத் தொடங்கினார்.

 

தற்போது மேஸ்ட்ரோ கார்டு நிறுவனம் 2019 ஆண்டுக்குள் 16.25 பில்லியன் ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தது. அதில் 75% முதலீடை இது வரை அந்நிறுவனம் இந்தியாவில் செய்திருக்கிறது. இந்நிறுவனம் சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் வதோதரா  என்னும் பகுதியில் தொழில்நுட்ப மையத்தைத் திறந்தது. மொத்த உலகின் 14% தொழிலாளர்கள் இந்தியாவில் மட்டும் உள்ளது குறிப்பிடதக்கது

 

சார்ந்த செய்திகள்