Skip to main content

குடும்பத்தோடு தாஜ்மஹாலை பார்த்து ரசித்த ட்ரம்ப்...

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகிய இருவரும் தாஜ்மஹாலை சுற்றிபார்த்தனர்.

 

trump family visits tajmahal

 

 

இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த இரண்டு நாட்கள் பயணத்தில் ட்ரம்ப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இன்று நண்பகல் அகமதாபாத் வந்த ட்ரம்ப் அங்குள்ள சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார்.

அதன்பின்னர் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து ட்ரம்ப் மற்றும் மோடி ஆகியோர் உரையாற்றினர். பின்னர் அங்கிருந்து ஆக்ரா வந்த ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் தாஜ்மஹாலை சுற்றிபார்த்தனர். ட்ரம்ப் மற்றும் மெலனியா தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்து பின்னர் இவான்கா மற்றும் அவரது கணவர் ஜாரெட் கஸ்னர் ஆகியோரும் தாஜ்மஹாலை பார்வையிட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்