Skip to main content

ஹெல்மெட் போடாம 'லாரி' ஓட்டுறதா? - ஃபைன் போட்ட போலீசார்!

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

fine bil

 

ஒடிசா மாநிலம் ஜகன்னாத்பூரில் சரக்கு லாரி உரிமையளாராக இருப்பவர் பிரமோத் குமார் ஸ்வைன். இவர், தனது வாகன உரிமையைப் புதுப்பிப்பதற்காக வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவர், தனக்கு விதிக்கப்பட்ட அபாராதத்திற்கான காரணத்தை அறிந்து அதிர்ந்துள்ளார்.

 

ஹெல்மெட் போடாததற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டு டிசம்பரில் அந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லாரி ஓட்ட ஹெல்மெட் தேவையில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனாலும் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், பிரமோத் குமார் ஸ்வைன் அபராதம் கட்டிய பிறகே, அவரின் வாகன உரிமை புதுப்பித்துத் தரப்பட்டுள்ளது. 

 

சரக்கு லாரியை ஹெல்மெட் அணியாமல் ஒட்டியதற்கு அபராதம் விதிக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குத் தரப்பட்ட அபராத ரசீது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப் பொதுநல மனு; மனுதாரருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
The court fined the petitioner on PIL to grant bail to Kejriwal

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘கெஜ்ரிவாலை அவரது பதவிக்காலம் மற்றும் விசாரணை முடியும் வரை நிலுவையில் உள்ள அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ யால் பதிவு செய்யப்பட அனைத்து குற்ற வழக்குகளிலும் இருந்து இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த மனு இன்று (22-04-24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மித் பிரீதம் சிங் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா, “இந்தப் பொதுநல வழக்கு முற்றிலும் அனுமதிக்க முடியாதது. மேலும், தவறான வழிகாட்டுதலானது. மனுதாரர், நீதிமன்றத்தை அரசியல் தளமாக்குகிறார். கெஜ்ரிவால் விரும்பினால், ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார். அப்படி இருக்கையில், அவருக்காக மனு தாக்கல் செய்ய இவர் யார்?. இது விளம்பர நோக்கம் கொண்ட வழக்கு ஆகும்” என்று வாதிட்டார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘கெஜ்ரிவாலுக்கு உங்கள் உதவி எதுவும் தேவையில்லை. அவருக்கு உதவ நீங்கள் யார்?.’ என்று தெரிவித்தனர். அப்போது, மனுதாரரின் தரப்பில் ஆஜரான கரண்பால் சிங், “முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட கெஜ்ரிவால் இல்லாததால் கடந்த ஒரு மாதமாக அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டு, மக்கள் அவதிப்படுகிறார்கள்” என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள்,  ‘கெஜ்ரிவால் சார்பாக மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அதிகாரமும் இல்லை. மனுதாரர் சட்டக்கல்லூரி வகுப்புகளுக்கு செல்கிறாரா?. அவர் சட்டக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்று இதிலிருந்து தெரிகிறது’ எனக் கூறியும் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறியும் மனுதாரரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.