Skip to main content

சிகிச்சையில் 6 லட்சம் பேர்... இந்திய கரோனா நிலவரம்!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021

 

today corona rate in india

 

இந்தியாவில் இதுவரை 3.01 கோடி பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (25.06.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு 3,01,34,445 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 51,667 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

இந்தியாவில் ஒரேநாளில் 64,527 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,91,28,267 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 96.66 சதவீதமாக இருக்கிறது. அதேபோல் உயிரிழப்பு விகிதம் 1.31 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் கரோனாவுக்கு 1,329 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கரோனாவால் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,93,310 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவிற்கு 6,12,868 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்