Skip to main content

என்னை அரசியலில் பழிதீர்க்க வழியில்லை; திருப்பதி மூலம் வீண்பழி -சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

Published on 28/06/2018 | Edited on 28/06/2018
chandrababu naidu

 

 

 

அரசியல்  ரீதியாக பழிவாங்க முடியாத காரணத்தால் திருப்பதி கோவில் விவகாரத்தில் சிலர் என்னை பழிவாங்க துடிக்கிறார்கள் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

 

நேற்று விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அந்த நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது  கூறுகையில்,

என்னை அரசியல் ரீதியாக பழிவாங்க முடியாத சிலர் தன்மீது இருக்கும் பயத்தில் திருப்பதி கோவில் மூலம் பழிதீர்க்க வீண்பழி சுமத்தி வருகின்றனர். 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற பிரமோற்சவதத்தின் போது அரசு  சார்பில் பட்டு வஸ்திரம் கொண்டு சென்ற போது என்னை திட்டமிட்டு கொல்ல முயன்றனர். ஆனாலும் அந்த ஏழுமலையான் என்னை காப்பாற்றினார்.

 

 

 

ஆனால் தற்போது பதிவேட்டில் இல்லாத வைரம் மற்றும் நகைகள் குறித்து குற்றம்சாட்டி வருகின்றனர்.  இது தொடர்பாக ஏற்கனவே நீதிபதிகள் விசாரணை நடந்து வருகிறது.

 

வருங்காலங்களில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது திருப்பதி கோவிலின் நகைகள் மற்றும் கணக்குகள் பற்றிய ஆய்வுகள் நீதிபதிகள் மூலம் நடத்தப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்படும் இவ்வாறு அவர் கூறினார்.     

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆந்திராவில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Allotment of portfolios to ministers in Andhra Pradesh

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அந்த வகையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக நேற்று முன்தினம் (12.06.2024) பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் ஆந்திர அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குச் சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத அனைத்து துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பவன் கல்யாண் துணை முதல்வராகவும், பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக நீர் வழங்கல்; சுற்றுச்சூழல், காடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

Allotment of portfolios to ministers in Andhra Pradesh

நாரா லோகேஷ் - மனித வள மேம்பாடு; ஐடி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கிஞ்சராபு அட்சண்னைடு - வேளாண்மை, கூட்டுறவு, சந்தைப்படுத்தல், கால்நடை பராமரிப்பு, பால்வள மேம்பாடு மீன்வளம், கொள்ளு ரவீந்திரன் - சுரங்கங்கள் மற்றும் புவியியல், கலால் வரி, நாதெண்டல மனோகர் - உணவு மற்றும் பொது விநியோகம், நுகர்வோர் விவகாரங்கள், பொங்குரு நாராயணா -  நகராட்சி நிர்வாகம் & நகர்ப்புற வளர்ச்சித்துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அனிதா வாங்கலபுடி - உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை, சத்ய குமார் யாதவ் - ஆரோக்கியம்; குடும்ப நலன் மற்றும் மருத்துவக் கல்வி, நிம்மலா ராமாநாயுடு - நீர்வள மேம்பாடு, நசியம் முகமது பாரூக் - சட்டம் மற்றும் நீதி; சிறுபான்மையினர் நலன், ஆனம் ராம்நாராயண ரெட்டி - நன்கொடைகள், பையாவுல கேசவ் - நிதி; திட்டமிடல்; வணிக வரிகள் மற்றும் சட்டமன்றம், அனகனி சத்ய பிரசாத் - வருவாய், பதிவு முத்திரைகள் துறை, கொலுசு பார்த்தசாரதி - வீட்டுவசதி, தகவல் தொடர்புத்துறை, டோலா பால வீராஞ்சநேய ஸ்வாமி - சமூக நலன்; மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன்; சசிவாலயம் & கிராம தன்னார்வலர், கோட்டிப்பட்டி ரவிக்குமார் - ஆற்றல், கந்துலா துர்கேஷ் - சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் ஒளிப்பதிவுத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கும்மாடி சந்தியா ராணி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்; பழங்குடியினர் நலன், பிசி ஜனார்தன் ரெட்டி - சாலைகள் மற்றும் கட்டிடங்கள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள், டி.ஜி. பரத் - தொழில்கள் மற்றும் வர்த்தகம்; உணவு பதப்படுத்தும்முறை, எஸ்.சவிதா - பிற்படுத்தப்பட்டோர் நலன், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் நலன்; கைத்தறி மற்றும் ஜவுளி, வாசம்செட்டி சுபாஷ் - தொழிலாளர், தொழிற்சாலைகள், கொதிகலன்கள் மற்றும் காப்பீட்டு மருத்துவ சேவைகள், கொண்டபள்ளி ஸ்ரீனிவாஸ் - சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி- போக்குவரத்து; இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

Next Story

சபாநாயகர் தேர்தல் தேதி அறிவிப்பு; தக்கவைக்க முயலும் பாஜக

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
nn

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 09.06.2024 அன்று நடைபெற்றது.

இந்நிலையில் ஜூன் 26 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் தங்கள் தரப்பிற்கு சபாநாயகர் பதவி வேண்டும் என நிபந்தனை விதித்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதேநேரம் சபாநாயகர் பதவியை தாங்களே தக்க வைத்துக் கொள்ள பாஜக மும்முரம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

nn

கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை கேபினட் அந்தஸ்து பதவிகள் வழங்குவது, எத்தனை இணைய அமைச்சர் பதவிகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டபோதே சபாநாயகர் தேர்வு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அதன்படி பாஜகவை சேர்ந்த ஒருவரையே சபாநாயகராக நியமிக்க வேண்டும் என பாஜகவை சேர்ந்தவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக ஆந்திர மாநில பாஜக தலைவரான புரந்தேஸ்வரியை அந்த பதவிக்கு கொண்டு வர வேண்டும் என பாஜகவின் ஒரு சாரார் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. புரந்தேஸ்வரி ஆந்திர முதல்வராக உள்ள சந்திரபாபு நாயுடுவின் மனைவியின் சகோதரி என்பது குறிப்பிடத்தகுந்தது.