Skip to main content

காஷ்மீரிலிலும் வாரணாசியிலும் வெங்கடாஜலபதி ஆலயம்!

Published on 31/12/2019 | Edited on 31/12/2019


  

காஷ்மீரை இந்துக்களின் ஆன்மீக பூமியாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது மத்திய பாஜக அரசு. ஆந்திர மாநிலத்திலுள்ள உலகப் பிரசித்திப்பெற்ற திருக்கோவிலான திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயத்தை காஷ்மீரில் நிறுவும் முயற்சியில் இருக்கின்றனர். அதற்கு முன்னதாக, உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள வாரணாசியில் வெங்கடாஜலபதி ஆலயத்தை அமையவிருக்கிறது. 

 

tt


            

மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் அர்ஜுன்ராம் மேக்வால். இவரது தனி உதவியாளராக இருக்கும் இளைஞர் ப்ரித்வி, பிரதமர் மோடி மிக நெருக்கமானவராக அறியப்படுகிறார். சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்து, ’’ இந்துக்களின் ஆன்மீக தலைநகரான வாரணாசியிலும், காஷ்மீரிலிலும் திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயத்தை நிறுவலாம். இதன் மூலம் ஆன்மீக பக்தர்கள் மனம் குளிர்வார்கள் ‘’  என்கிற கோரிக்கையை வைத்திருக்கிறார் ப்ரித்வி. 

 

eerrtt


        



  ’’ இரு வாரங்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவை கூட்டத்தை நடத்திய பிரதமர் மோடி, அந்த கூட்டம் முடிந்ததும், வாரணாசியிலும் காஷ்மீரிலும் பெருமாள் ஆலயத்தை அமைப்பது தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, திருப்பதி தேவஸ்தான போர்டின் தலைவர் சுப்பாரெட்டியிடம் விவாதித்துள்ளனர் மத்திய அரசு அதிகாரிகள். விவாதத்தையடுத்து சில முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில், வாரணாசியில் திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயத்தை அமைக்க தேவாஸ்தானம் போர்டு ஒப்புதல் தந்துள்ளதை அறிவித்திருக்கிறார் சுப்பாரெட்டி. ஆலயம் அமைப்பதற்கான பணிகள் வாரணாசியில் துவங்கவிருக்கின்றன. இரண்டாம் கட்டமாக, காஷ்மீரில் ஆலயத்தை நிருவவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது ’’ என்கிற தகவல்கள் பாஜக வட்டாரங்களிலிருந்து கிடைக்கின்றன.


 

சார்ந்த செய்திகள்