Published on 29/11/2018 | Edited on 29/11/2018
தெலுங்கானாவில் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் அங்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று சந்திரபாபு நாயுடுவுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொண்டார் ராகுல் காந்தி. அப்பொழுது பேசிய அவர் 'பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, உச்ச நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, சிபிஐ, வருமான வரித்துறை என அனைத்து அமைப்புகளும் சீரழிக்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், ரூ.2 லட்சம் வரை விவசாயிகளின் வங்கிக் கடன் ரத்து செய்யப்படும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வட்டியின்றி ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள வீடில்லா அனைவருக்கும் ரூ. 5 லட்சம் செலவில் வீடு கட்டித்தரப்படும்' எனவும் கூறினார்.