Skip to main content

கரோனா தடுப்பு உபகரணங்களுக்கு வரிவிலக்கு... மத்திய நிதியமைச்சர் தலைமையில் விவாதம்!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

Tax exemption for corona prevention equipment ... Debate led by Union Finance Minister!

 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கரோனா மற்றும் கருப்பு பூஞ்சை தொற்றுகளுக்கான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் ஆகியவற்றுக்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றுவருகிறது. கூட்டத்தில் காணொளி வாயிலாக அனைத்து மாநில நிதியமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

 

Tax exemption for corona prevention equipment ... Debate led by Union Finance Minister!

 

மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், பல்ஸ் ஆக்சிமீட்டர் மீதான வரியை ரத்து செய்வது தொடர்பாக சென்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் குழு அமைக்கப்பட்டிருந்தது. மேகாலயா நிதி அமைச்சர் கன்ராக்ட் சங்மா தலைமையில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கொண்ட குழு, இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்துள்ளது. குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் ஜிஎஸ்டி கூட்டத்தில் இன்று விவாதம் நடைபெற்றுவருகிறது தமிழ்நாடு சார்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்