இந்தியாவில் கேரளா மாநிலத்தில்தான் அதிக படிப்பறிவு உள்ளவர்கள் இருப்பதாகவும், அரசியல் அறிவு உள்ளவர்கள் இருப்பதாகவும் பல புள்ளியியல்களில் தெரிவிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட அந்த மாநிலத்தில் அடிக்கடி எதாவது கலகலப்பான விஷயங்கள் அசால்ட்டாக நடப்பது உண்டு. இந்தியாவில் 'பார்ன்' என்றாலே, எல்லாரும் ‘உஷ்’ என்று முடித்துக்கொள்வார்கள், மனதிற்குள் மறைத்து வைத்துக்கொண்டு. ஆனால், கேரளாவிலோ மனதிற்குள் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் பார்ன் ஸ்டார்களின் படத்தை, பேருந்தின் வெளியே பெயிண்ட் செய்து வைத்துள்ளனர். நம் ஊர்களில் ரஜினி, கமல், விஜய், அஜித் என்று பெரிய நட்சத்திரங்களின் படத்தை பேருந்துகளில் காணலாம், அதேபோன்று கேரளாவுக்கு சென்றால் திருவனந்தபுரத்தில் சிகூஸ் டிராவல்ஸில் உள்ள ஒரு பேருந்தில் சன்னி லியோன், மியா கலிஃபா மற்றும் மியா மல்கோவா போன்ற பார்ன் நட்சத்திரங்களை பெயின்ட் செய்துள்ளனர்.
சன்னி லியோனுக்கு எவ்வளவு ரசிகர்கள் அங்கிருக்கிறார்கள் என்பது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை நினைவு கூர்ந்தாலே தெரியும். கடந்த ஆண்டு கேரளாவில் மொபைல் கடையை திறந்துவைக்க வந்த சன்னி லியோனை பார்க்கவே மக்கள் கூட்டம் வெள்ளம்போல அடித்துநெருக்கிக்கொண்டு அந்த பகுதியை சூழ்ந்தனர். மக்கள் கூட்டத்தை பார்த்த சன்னி, முகம் மலர்ந்து, சிரித்த முகமாகவே இருந்தார். அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய சன்னி, "மலையாள சினிமாவில் வாய்ப்பு அளித்தால் கண்டிப்பாக மலையாளத்தில் நடிப்பேன். கேரளாவை கடவுளின் நாடு என்று அழைப்பது நிஜம்தான், அத்தனை அழகு மீண்டும் இந்த கேரளாவுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறேன்" என்றார். அச்சமயத்தில் அமித் ஷா கேரளாவுக்கு வருகை புரிந்தார் அவருக்குக்கூட அவ்வளவு கூட்டம் இல்லை என்று சமூக வலைத்தளத்தில் கலாய்த்தனர். 90களில் மலையாளத்தின் உச்சநட்சத்திரங்களான மம்முட்டி மற்றும் மோஹன்லால் படங்களை விட ஷகிலாவின் படங்கள் தாறுமாறாக ஓடியது மாலிவுட்டின் வரலாறு என்பதும் குறிப்பிடத்தக்கது.