Skip to main content

இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் ஸ்புட்னிக் v செலுத்தப்படும்..?

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

sputnik v

 

இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஸ்புட்னிக் v தடுப்பூசிக்கு இந்தியா அனுமதியளித்தது. அதனைத்தொடர்ந்து ஸ்புட்னிக் v தடுப்பூசிக்கு இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்தது. இருப்பினும் முழுவீச்சில் பயன்பாட்டிற்கு வரவில்லை. 

 

இந்தநிலையில் ஸ்புட்னிக் v தடுப்பூசியை இந்தியாவில் விநியோகிக்கவும், தயாரிக்கவுமுள்ள நிறுவனங்களில் ஒன்றான டாக்டர் ரெட்டி'ஸ் லேபரேட்டரிஸ் நிறுவனம், ஸ்புட்னிக் v தடுப்பூசி இந்தியாவில் இனி சென்னை, பெங்களூரு, மும்பை, விசாகப்பட்டினம், பட்டி, கோல்ஹாபூர் மற்றும் மிரியலகுடா ஆகிய ஒன்பது நகரங்களில் செலுத்தப்படும் என அறிவித்துள்ளது.

 

அதேநேரத்தில் இது சோதனை ரீதியான விநியோகம் என்பதால், ஸ்புட்னிக் v தடுப்பூசியை செலுத்திக்கொள்ள கோவின் செயலியில் பதிவு செய்ய முடியாதென்றும், வர்த்தக ரீதியிலான விநியோகம் தொடங்கிய பிறகே கோவின் செயலில் பதிவு செய்து இந்த தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும்  டாக்டர் ரெட்டி'ஸ் லேபரேட்டரிஸ் கூறியுள்ளது.

 

ஸ்புட்னிக் v தடுப்பூசியை எவ்வாறு இருப்பு வைப்பது, கோவின் செயலியோடு எப்படி ஒருங்கிணைப்பது போன்றவற்றை சோதனை செய்யவே, தற்போது சோதனை விநியோகம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்