Skip to main content

மலக்குழி சாவுகளுக்கு குட்பை சொல்லிய கேரள அரசு! ஆக்‌ஷனில் இறங்கும் பெருச்சாளி!!

Published on 19/02/2018 | Edited on 19/02/2018

நம் நாட்டில் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையிலும், பாதாளச் சாக்கடையில் இறங்கி விஷவாயு தாக்கியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இதை முழுவதுமாக தடுத்து நிறுத்த கேரள அரசு ரோபோ ஒன்றை பயன்படுத்த முடிவு செய்து அதற்கான வேலைகள் கடந்த சில மாதங்களாக நடந்துவந்தன. தற்போது அந்த ரோபோவின் சோதனை ஓட்டங்கள் முடிந்து பொதுப்பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

 

Robo

 

ஜென்ரோபோட்டிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோவிற்கு ‘பெருச்சாளி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவை திருவனந்தபுரத்தில் 5 ஆயிரம் பாதாளச் சாக்கடைகளில் சோதனை செய்து பார்த்ததில், அனைத்திலும் வெற்றி அடைந்துள்ளது. இந்த ரோபோவுக்கான மொத்த செலவையும் கேரள அரசு எற்றுக்கொண்டுள்ளது. உள்ளூர் நிறுவனங்களை ஊக்குவிப்பதே நம் நோக்கம் என கேரள நீர் ஆணையத்தின் மேலாளர் ஷைனாமோல் தெரிவித்துள்ளார். 

 

ப்ளூடூத், வை-பை, கண்ட்ரோல் பேனல் உள்ளிட்ட கட்டுப்படுத்தும் சாதனங்களும், கழிவுகளை அள்ள வாளி, துடுப்பு போன்ற பொருட்களும் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோவை 9 இளைஞர்கள் கொண்ட குழுதான் தயாரித்துள்ளது. 

 

மலக்குழி சாவுகளுக்கு முடிவு கட்ட இருக்கும் இந்த பெருச்சாளி ரோபோ, வரும் மார்ச் 2ஆம் தேதி ஆற்றுக்கால் பகவதி கோவில் பொங்கல் தினத்தன்று பணியைத் தொடங்கவுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

எலான் மஸ்க் அறிமுகம் செய்த ரோபோவில் இந்தியன் டச்

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

 Indian Touch in Elon Musk Launched Robot

 

டெஸ்லா விண்வெளி நிறுவனத்தின் உரிமையாளரும், அண்மையில் ட்விட்டர் வலைத்தளத்தை விலை கொடுத்து வாங்கி அதை நினைத்தபடியெல்லாம் மாற்றிக்கொண்டிருப்பவருமான எலான் மஸ்க் தற்போது மனித வடிவம் கொண்ட ரோபோக்களை வெளியிட்டுள்ளார்.

 

டெஸ்லா நிறுவனம் அவர்களுடைய அதிகாரப்பூர்வ தளத்தில் 'டெஸ்லா ஆப்டிமஸ்' என்ற மனித வடிவிலான ரோபோக்களை பற்றிய செயல்பாடுகளை வெளியிட்டுள்ளது. ஐந்து முதல் ஆறு அடி அங்குலம் உயரம் கொண்ட மனித வடிவிலான இந்த ரோபோக்கள் 56 கிலோ எடை கொண்டது. இவை கொடுக்கப்படும் வேலைகளைத் திறம்பட செய்து முடிக்கிறது.

 

பல்வேறு உலக நாடுகளின் சிறு சிறு அம்சங்களும் இந்த ரோபோக்களில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியன் டச் ஆக இந்த ரோபோவில் சில விஷயங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 'நமஸ்தே' என்றால் 'வணக்கம்' வைக்கவும், நடராஜா ஆசனா, விருட்சாசனா ஆகிய இரண்டு ஆசனங்களையும் செய்து காட்டுகிறது. 2021 ஆம் ஆண்டு டெஸ்லாவின் செயற்கை நுண்ணறிவு தினத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரோபோக்களின் செயல்பாடுகளை தற்பொழுது டெஸ்லா அறிமுகப்படுத்தி உள்ளது. தொடர்ச்சியாக மனிதர்கள் ஒரே விதமான போர் அடிக்கும் வேலையைச் செய்வதைத் தவிர்க்கவே இதனை அறிமுகப்படுத்தியுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Next Story

‘ஹாய் நான் ரோபோ; எடை 800 கிலோ’ - யானையைக் கண்ட பரவசத்தில் பக்தர்கள்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

kerala thrissur krishna temple robo elephant viral video

 

தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் உள்ள கோவில்களில் யானைகள் பெருமளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. திருவிழாவின் போதும் கோவிலின் விஷேச தினங்களிலும் கோயில் உற்சவங்களிலும் யானைகளின் பங்கு என்பது அதிக அளவில் உள்ளன. அதுமட்டுமின்றி, கோயிலுக்கு வரும் பக்தர்கள் யானைகளிடம் ஆசீர்வாதம் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும், கேரளாவில் உள்ள அனைத்து முக்கியமான கோயில்களிலும் யானைகள் கண்டிப்பாக இருக்கும். மேலும் அங்கு யானைகளை வைத்தே பல திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

 

இருப்பினும் கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் தொடர்ந்து பல இன்னல்களுக்கு ஆளாவதாக பீட்டா போன்ற அமைப்பு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றது. இதற்கிடையில் இதற்கு தீர்வு காணும் விதமாக கேரளாவில் உள்ள ஒரு கோயிலில் ‘ரோபோ யானை சேவை’  ஒன்றை தொடங்கி உள்ளது.

 

இந்நிலையில், கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் பீட்டா அமைப்பு சார்பில் ரோபோ யானை தானமாக வழங்கப்பட்டுள்ளது. நிஜ யானை போலவே தோற்றமளிக்கும் இந்த ரோபோ யானைக்கு  துதிக்கை, காது, தந்தம் என அனைத்தும் உள்ளது. 10 அடி உயரமும் 800 கிலோ எடையும் உள்ள இந்த யானையின் மேல் 4 பேர் வரை உட்காரலாம் எனக் கூறப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிலில் உள்ள ரோபோ யானையிடம் ஆசிர்வாதம் வாங்கிச் செல்கின்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

- சிவாஜி