இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியான கோவாக்சின், மக்களுக்குப் பரவலாக செலுத்தப்பட்டுவருகிறது. மேலும் கோவாக்சின் தடுப்பூசி, இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான குழந்தைகள் மீதும் பரிசோதிக்கப்பட்டுவந்தது.
இந்தநிலையில், கோவாக்சின் தடுப்பூசியை 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான குழந்தைகளுக்கு செலுத்த தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரின் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிபுணர் குழுவின் பரிந்துரையையடுத்து விரைவில் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்த தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் விரைவில் அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் இந்தியாவில் விரைவில் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கவுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதானோருக்கான ஸைடஸ் காடிலா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.