Skip to main content

பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து...100 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளனர்...

Published on 14/03/2019 | Edited on 14/03/2019

நைஜிரியாவில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

nigeria

 

நைஜீரியாவின் லாகோஸ்  நகரில் பள்ளிக் கட்டிடம் இன்று காலை திடீரென சரிந்து விழுந்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100க்கும் அதிகமான மாணவர்கள் கட்டிடத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் துணை ராணுவ படையினர் உதவியுடன் அங்குள்ள உள்ளூர் மக்களும் இணைந்து பல மாணவர்களைக் காப்பாற்றியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்