Skip to main content

இரண்டாவது முறையாக வட்டியை உயர்த்திய எஸ்.பி.ஐ. வங்கி!

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

SBI raises interest rates for second time Bank!

 

கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது பாரத ஸ்டேட் வங்கி. 

 

வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி, கடந்த மே 4- ஆம் தேதி அன்று உயர்த்தியது. இதன் தொடர்ச்சியாக வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களின் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி. கடன் வட்டியை 0.1% அதிகரிப்பதாகத் தெரிவித்துள்ளது. 

 

இந்த வட்டி உயர்வு ஏற்கனவே, அந்த வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கும், புதிதாக வாங்க உள்ளவர்களுக்கும் பொருந்தும். கடந்த மாதம் தான் பாரத் ஸ்டேட் வங்கி 0.1% வட்டியை உயர்த்தியிருந்த நிலையில், இரண்டாவது மாதமாக மீண்டும் வட்டி உயர்வை அந்த வங்கி அறிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்