Skip to main content

புகழ் பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் காலமானார்!

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

புகழ் பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் (69) காலமானார். 
 

உடல்நலக்குறைவால் கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் கத்ரி கோபால்நாத்தின் உயிர்பிரிந்தது. மறைந்த கத்ரி கோபால்நாத் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் 1949- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11- ஆம் தேதி பிறந்தார். இவர் கலாநிகேதனாவை சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடம் சாக்சபோன் வாசிப்பை கற்றார். சென்னையில் பிரபல மிருதங்க இசைக்கலைஞர் டி.வி. கோபாலகிருஷ்ணனிடம் இசைப்பயிற்சி பெற்றார். 

saxophone samrat kadri gopalnath passed away karnataka


கத்ரிகோபால்நாத்தின் இசை சேவையை பாராட்டி மத்திய அரசு, கடந்த 2004- ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. அதேபோல் தமிழக அரசும் கலைமாமணி விருது வழங்கி பெருமைப்படுத்தியது. மேலும் சாக்சபோன் சக்கரவர்த்தி, சாக்சபோன் சாம்ராட், கர்நாடக கலாஸ்ரீ உள்ளிட்ட பட்டங்களை பெற்றுள்ளார். இயக்குனர் கே.பாலச்சந்தரின் டூயட் படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றியிருந்தார். டூயட் படத்தின் அனைத்து பாடல்களிலும் கத்ரிகோபால்நாத்தின் சாக்சபோன் இசை பயன்படுத்தப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி இசைக்கலைஞர்களுடன் இணைந்து இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   
 

saxophone samrat kadri gopalnath passed away karnataka



 

சார்ந்த செய்திகள்