Skip to main content

குல்லாவை அணிய மறுத்த யோகி ஆதித்நாத் !!; மத விழா முன்னேற்பாட்டில் சர்ச்சை !!

Published on 29/06/2018 | Edited on 29/06/2018

 

bjp

 

 

 

நேற்று உத்திரபிரதேசத்தில் மகஹர் பகுதியில் கவி ஞானி கபீரின் 500 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் நினைவிவு கூட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி கவி ஞானி கபீரின் நினைவிடத்தில் பட்டு வஸ்த்திரம் பொத்தி மரியாதையை செய்தார்.

 

அதற்கு முன்னதாக இந்த நினைவு தின கூட்டத்தின் முன் ஏற்பாடுகளை பார்வையிட சென்ற உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அங்கிருந்த  நிர்வாகி ஒருவர் காதின் ஹுசைன் குல்லா ஒன்றை அவருக்கு பரிசளித்தார். அந்த தொப்பியை பரிசளிக்கும் போது அந்த குல்லாவை அவரது தலையில் அணிவிக்க முற்பட்டார் அந்த நிர்வாகி.

 

 

ஆனால் உடனே முதல்வர் ஆதித்யநாத் அந்த தொப்பியை அணிய விருப்பம் இல்லை என பணியுடன் மறுத்து அந்த குல்லாவை தன்னுடன் வைத்துக்கொண்டார்.

 

இதை அடுத்து நேற்று கவி ஞானி கபீரின் 500 வது பிறந்த நாள்  விழாவில் நரேந்திர மோடி பேசிய பேச்சு அடுத்த பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை மோடி தொடங்கிவிட்டார் என கூறப்படும் அளவிற்கு இருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதேபோல் கடந்த 2011-ஆம் ஆண்டு குஜராத் மோடி முதல்வராக இருந்தபொழுது மத நல்லிணக்கத்திற்காக உண்ணாவிரதம் இருந்தார். அப்பொழுது மதகுரு ஒருவர் அன்பளித்த குல்லாவை மோடி அணிய மறுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்