Skip to main content

”அது இலவசம் அல்ல, மோடி அரசாங்கம் திருடியதை மக்களுக்கே திருப்பி தருகிறோம்...”- ராகுல் காந்தி 

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
rahul gandhi


மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 75 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் அளித்துள்ளது.  கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து பாஜக ஆட்சிதான் மபியில் நடைபெற்று வருகிறது. ஆகையால் இந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்துள்ளது.இந்த தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, திக் விஜய் சிங், கமல்நாத் உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டனர். சுமார் 75 வாக்குறுதிகள் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன, அதில் பாஜகவுக்கு போட்டியாக பல திட்டங்கள் இருக்கின்றன. பட்டியலில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்: விவசாயிகளுக்கு பாதி மின் கட்டணம், விவசாயக் கடன் 2 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி, வீடுகளுக்கு மின் கட்டணத்தில் முதல் 100 யூனிட்டுகள் வரை யூனிட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் கட்டணம், வீடு இல்லதவர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம். 450 சதுரடிக்கு வீடுகட்ட ரூ. 2.50 லட்சம் மானியத்தொகை, ஐடி நிறுவனத்தில் 1 லட்சம் பேருக்கு பணி, ரூ. 300ல் இருந்து ரூ. 1000 ஆக சமூக பென்ஷன் உயர்த்தப்படும், பெண்களுக்கு முனைவர் பட்டம் வரை இலவச கல்வி, பெண்களுக்கு  திருமண உதவித் தொகையாக ரூ. 51,000, +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசம்.
 

இதனை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றுள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இலவச திட்டங்கள் குறித்து பேசுகையில், “ மக்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஒன்றும் பரிசு இல்லை. அது அவர்களுக்கானது. தற்போதைய சூழலில் மோடி அரசாங்கம் மக்களிடம் இருந்து அவற்றை எல்லாம் திருடுகிறார்கள். நாங்கள் அதை சேரவேண்டிய மக்களுக்கே திருப்பி தருகிறோம் என்று சாகர் பகுதியில் நடந்த காங்கிரஸ் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்