Skip to main content

ராகுல் காந்தி இந்துக்கள் மனதை புண்படுத்தினாரா???...கைலாஷ் மானசரோவர் யாத்திரை

Published on 05/09/2018 | Edited on 05/09/2018
vootu


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு செல்வதற்காக நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள வூட்டு என்னும் ஹோட்டலில் தங்கினார். அப்போது, அந்த ஹோட்டலில் உணவருந்தும் போது ராகுல் மாமிசம் சாப்பிட்டதாக உள்ளூர் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன. இதனை தொடர்ந்து பாஜக,” புனித யாத்திரையின் போது மாமிசம் சாப்பிட்டு இந்துகளின் மனதை ராகுல் புண்படுத்திவிட்டார்” என்று குற்றச்சாட்டுகளை வைத்தது.
 

இந்நிலையில் ஹோட்டல் நிர்வாகம், ”ராகுல் காந்தி புனித யாத்திரையின் போது மாமிசம் சாப்பிட்டதாக பலர் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். ஆனால், அவர் சுத்தமான சைவ உணவையே எங்களிடம் ஆர்டர் செய்து சாப்பிட்டார்”என்று தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்