Skip to main content

ஒரு நொடி... ஒரே பாய்ச்சல்... மானை மறைந்திருந்து வேட்டையாடிய மலைப்பாம்பு! (வீடியோ)

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய வனப்பகுதியில் மிகப்பெரிய குட்டை ஒன்று உள்ளது. எவ்வளவு மழை பெய்தாலும் இந்த பகுதி சேறும், சகதியாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இங்கு 4 மான் குட்டிகள் நீர் அருந்திக் கொண்டிருந்தன. அப்போது ஏதோ சத்தம் கேட்க மான்கள் தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிட்டு பார்த்துள்ளன. ஆனால் எந்த விலங்கினமும், அதன் கண்களுக்கு தெரியவில்லை. அதனால் அந்த தண்ணீர் குடிப்பதில் கவனம் செலுத்தியது. இந்நிலையில் நீரில் மறைந்திருந்த மலைப் பாம்பு ஒன்று, மின்னல் வேகத்தில் வந்து, ஒரு மானை பாய்ந்து சுருட்டி வேட்டையாடியது.

 


அந்த பகுதியில் வனத்துறையினரால் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான, அந்த திகைக்க வைக்கும் காட்சிகளை, சுஷாந்தா நந்தா என்ற வனத்துறை அதிகாரி, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மலைப்பாம்பு மானை வேட்டையாடிய வேகம், மனிதன் கண் இமைக்கும் நொடியை விட மிகக் குறைவானது. சாதாரணமாக மனிதன் கண் இமைப்பதற்கு, 200 மில்லி நொடிகள் ஆகிறது என்றால், மலைப்பாம்பு மானை வேட்டையாட எடுத்துக் கொண்ட நேரம் 50 மில்லி நொடிகள் மட்டுமே என்று அந்த வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்கள்.

 

சார்ந்த செய்திகள்