Skip to main content

எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்- புதுச்சேரி சபாநாயகருக்கு நோட்டீஸ்!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

 

PUDUCHERRY MLA DISQUALIFIED CHENNAI HIGH COURT ORDER

 

எம்.எல்.ஏ தகுதி நீக்கம் தொடர்பாக புதுச்சேரி சபாநாயருக்கு நோட்டீஸ் அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

ஆளும்கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், புதுச்சேரி அரசு கொறடா புகாரின் அடிப்படையில் சபாநாயகர் சிவக்கொழுந்து ஜுலை 10- ஆம் தேதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) தனவேலுவைத் தகுதி நீக்கம் செய்தார். 

PUDUCHERRY MLA DISQUALIFIED CHENNAI HIGH COURT ORDER

 

சபாநாயகர் முடிவை எதிர்த்து தனவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (14/07/2020) உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயர் சிவக்கொழுந்துக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்தியத் தேர்தல் ஆணையமும் நான்கு வாரங்களில் பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி, வழக்கை ஒத்திவைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சபாநாயகர் தேர்தல் தேதி அறிவிப்பு; தக்கவைக்க முயலும் பாஜக

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
nn

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 09.06.2024 அன்று நடைபெற்றது.

இந்நிலையில் ஜூன் 26 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் தங்கள் தரப்பிற்கு சபாநாயகர் பதவி வேண்டும் என நிபந்தனை விதித்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதேநேரம் சபாநாயகர் பதவியை தாங்களே தக்க வைத்துக் கொள்ள பாஜக மும்முரம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

nn

கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை கேபினட் அந்தஸ்து பதவிகள் வழங்குவது, எத்தனை இணைய அமைச்சர் பதவிகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டபோதே சபாநாயகர் தேர்வு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அதன்படி பாஜகவை சேர்ந்த ஒருவரையே சபாநாயகராக நியமிக்க வேண்டும் என பாஜகவை சேர்ந்தவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக ஆந்திர மாநில பாஜக தலைவரான புரந்தேஸ்வரியை அந்த பதவிக்கு கொண்டு வர வேண்டும் என பாஜகவின் ஒரு சாரார் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. புரந்தேஸ்வரி ஆந்திர முதல்வராக உள்ள சந்திரபாபு நாயுடுவின் மனைவியின் சகோதரி என்பது குறிப்பிடத்தகுந்தது. 

Next Story

விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு; பொதுமக்கள் சாலை மறியல்!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
puducherry redyarpalayam incident Public road blocks

புதுச்சேரியில் உள்ள  ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் வீட்டில் இருந்த மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து அவரை காப்பாற்ற சென்ற மகளும் வீட்டுக்குள்ளேயே மயங்கி விழுந்திருக்கிறார். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது. காரணமே தெரியாமல் இருவர் உயிரிழந்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் பாக்கியலட்சுமி (15) வயது சிறுமி, செந்தாமரை (72) அவருடைய மகள் காமாட்சி ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர். பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயு கழிவறை வழியாக வீட்டுக்குள் புகுந்ததாக முதலில் தகவல் வெளியானது. விஷவாயுவின் தன்மை குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் குவிந்தனர். 

puducherry redyarpalayam incident Public road blocks

இதன் தொடர்ச்சியாக அங்கு ஆய்வு நடைபெற்ற நிலையில் பாதாளச் சாக்கடையில் விஷவாயு கசிவு இல்லை எனப் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்தார். வீட்டுக்குள் வேறு ஏதேனும் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இத்தகைய சூழலில் பாதிக்கப்பட்ட பகுதியில் புதுவை முதல்வர் ரங்கசாமி ஆய்வு செய்தார். இதனையடுத்து இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 15 வயது சிறுமி பாக்கியலட்சுமியின் குடும்பத்தாருக்கு 30 லட்சம் நிதியுதவியும், மற்ற பெண்களான செந்தாமரை, காமாட்சி ஆகியோர் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாயும் நிதியுதவி அறிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க இரு குழுக்களை அமைத்து உத்தரவிட்டார்.

அதே சமயம் இப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக வீடுகளில் உணவு சமைக்கத் தடை விதிக்கப்பட்டது. எனவே அப்பகுதியில் அரசு சார்பில் வீடு வீடாகச் சென்று உணவு விநியோகம் செய்யும் பணியும் நடைபெற்றது. அதோடு வீட்டுக் கழிவறைகளுக்குத் தவறாக இணைப்பு வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தவும் முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த கோரி கோரி அப்பகுதி மக்கள் புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

puducherry redyarpalayam incident Public road blocks

அப்போது இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அலட்சியமாக இருந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த மூவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கழிவுகளை வெளியேற்ற புதிய பைப் லைன் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மறியலில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.