Skip to main content

குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் அறிவிப்பு

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

President police medal announcement

 

ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த பணிக்கான பதக்கங்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில், கடந்த ஆண்டு காவல்துறையில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது மற்றும் சேவை மிக்க மதிப்பு விருதுகள் 901 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதில் தலைசிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் தமிழகத்தைச் சேர்ந்த தேன்மொழி, பொன்ராமு, ரவிசேகரன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  ஐஜி தேன்மொழி சென்னையில் பணியாற்றி வருகிறார். பொன்ராமு செங்கல்பட்டு உதவி கண்காணிப்பாளராகவும்,  ரவிசேகரன் அரியலூர் ஏஎஸ்பியாகவும் பணியாற்றி வருகிறார். மேலும் சிறந்த சேவைக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் காவல் பதக்கம் தமிழகத்தைச் சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்