Skip to main content

'குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு!'- புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

'Pongal gift package for family card holders with 10 items!' - Puducherry Chief Minister's announcement!

 

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று (07/01/2022) சட்டப்பேரவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "பொங்கல் திருநாளை முன்னிட்டு புதுச்சேரி ரேஷன் கடைகளில் அனைத்து குடும்பஅட்டைதாரர்களுக்கும் ரூபாய் 490 மதிப்புள்ள 10 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும். ஜனவரி 12- ஆம் தேதி அன்று புதுச்சேரியில் நடைபெற உள்ள இளைஞர் தின விழாவில் பங்கேற்கவிருந்த பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். மாறாக, விழாவில் காணொளி மூலம் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். 

 

1,000 காவலர் பணியிடங்களை நிரப்ப உடல் தகுதித் தேர்வு வரும் ஜனவரி 19- ஆம் தேதி அன்று தொடங்க உள்ளது. ஒமிக்ரான் மற்றும் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை மூடுவது குறித்து பரிசீலித்து வருகிறோம்" என்றார்.

 

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், நமச்சிவாயம், சாய் ஜெ.சரவண குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்