Skip to main content

இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கேட்கும் நீரவ் மோடி!

Published on 11/06/2018 | Edited on 11/06/2018

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரக்கணக்கான மதிப்பிலான பணத்தை மோசடி செய்து தப்பியோடிய நீரவ் மோடி, இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

nirav

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தேசிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில், கடன் உத்தரவாதப் பத்திரங்களைப் பெற்று ரூ.13,578 கோடி மதிப்பிலான தொகையை மோசடி செய்தவர் வைர வியாபாரி நீரவ் மோடி. இதுகுறித்த குற்றச்சாட்டுகள் வெளிவந்த சமயத்தில், இதில் தொடர்புடைய நீரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மேகுல் சோக்ஸி ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பியோடினர். இந்நிலையில், தப்பிச் சென்றவர்களை மீட்டு மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்கான வேலைகள் நடந்துவருவதாக அரசு தெரிவித்து வருகிறது. 
 

இந்நிலையில், தனது சொந்த நாடான இந்தியாவில் தான் அரசியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதாக இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தைக் கருத்தில் கொண்டு தனக்கு அரசியல் தஞ்சம் வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கெனவே பல கோடி மதிப்பிலான கடன் தொகையைப் பெற்று இங்கிலாந்துக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையா இன்னமும் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்