Skip to main content

முன்னாள் காதலனால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோதனை!

Published on 25/02/2020 | Edited on 26/02/2020

முன்னாள் காதலியின் திருமணத்தை நிறுத்த படு பயங்கரமாக யோசித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சரோஜ் குமார். இவர் அப்பகுதியில் உள்ள இரண்டு சக்கர வாகன கடையில் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், அவர் அப்பகுதியில் வசித்து வந்த இளம்பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு காதலித்துள்ளார். இடையில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டார்கள். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. 



இதற்கிடையே அந்த பெண்ணை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு அந்த பெண்ணுடன் ஒன்றாக இருப்பதை போன்று மார்பிங் செய்யப்பட்ட போஸ்டர்களை அடித்து பெண்ணின் வீட்டுக்கு இருகில் இருக்கும் சுவர்களில் எல்லாம் ஒட்டியுள்ளார்.  இதனால் அந்த  பெண்ணின் வீட்டார் கடும் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

சார்ந்த செய்திகள்