Skip to main content

போதையில் அதிவேகமாக கார் ஓட்டிவந்த நபரால் அந்தரத்தில் தூக்கி எறியப்பட்ட மூன்று மாணவிகள்!

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

கேரளாவில் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று மாணவிகள் மீது மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் மாணவிகள் மூவர் பள்ளி முடிந்து சாலையில் சென்ற போது எதிரே வந்த கார் அவர்கள் மீது வேகமாக மோதியதில் சாலையின் ஓரத்தில் அவர்கள் தூக்கி எறியப்பட்டனர். மேலும், மாணவிகள் மீது மோதிய அந்த கார் சிறிது தூரம் சென்று இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது மோதியுள்ளது. மேலும் அவர்கள் மீது வேகமாக மோதிய கார் அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது. காரை ஓட்டியவர் மது அருந்திய நிலையில் இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



கார் விபத்துக்குள்ளானதில் அவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் மோதியதில் மூன்று மாணவிகள் உள்ளிட்ட 8 பேர் பலத்த காயமடைந்துள்ளார்கள். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவிகள் மீது கார் மோதும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்