Skip to main content

சிறுவர்களுக்கு ‘கோவாக்சின்’ மட்டுமே போடப்படும் - மத்திய அரசு

Published on 28/12/2021 | Edited on 28/12/2021
பக


உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பூசிக்குப் பூஸ்டர் டோஸ்களை செலுத்த தொடங்கியுள்ளன. இதனையொட்டி இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சூழலில், அண்மையில் இதுதொடர்பாக விவாதிக்க கூட்டம் நடைபெற்றது. ஆனால், அதில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி வரும் 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தார். மேலும் 15 முதல் 18 வயது உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எப்போது போடப்படும் என்றும், சிறுவர்களுக்கு இரண்டு தடுப்பூசில் எந்த டோஸ் போடப்படும் என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அதன்படி முதல் இரண்டு டோஸ் எந்த தடுப்பூசி போடப்பட்டதோ அதே தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசியாக போடப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 15 வயதை கடந்த சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விஷயத்தில் சில நாட்களாக நிலவி வந்த குழப்பம் தற்போது தீர்க்கப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்