Skip to main content

பண மதிப்பிழப்பு நீக்கத்தின் இரண்டாவது வருடம்... ஆர்.பி.ஐ (R.B.I) தரவுகள் சொல்வது என்ன...?

Published on 08/11/2018 | Edited on 08/11/2018

பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் (8 நவம்பர் 2016) இரண்டு வருடங்களாகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது  சொல்லப்பட்ட பல்வேறு காரணங்களில் ஒன்று டிஜிட்டல் பரிவர்த்தனை.  ஆனால் உண்மையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியா ரொக்கப் பரிவர்த்தனையில் இருந்து மாறி டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறியிருக்கிறதா என்று ஆர்.பி.ஐ-ன் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், இல்லை என்பதே பதில். மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னால் இருந்ததைவிட தற்போதுதான் ரொக்கப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது என்றும் ஆர்.பி.ஐ-ன் தரவுகள் தெரிவிக்கின்றது. 

 

nn

 

 

4 நவம்பர் 2016 வரை நாட்டின் பணப்புழக்கம் ரூ 17.9 இலட்சம் கோடியாகா இருந்தது. அதே பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டதன்பிறகு 26 அக்டோபர் 2018-ன் கணக்கின்படி நாட்டின் பணப்புழக்கம் ரூ 19.6 இலட்சம் கோடியாக  இருகிறது. இது கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 9.5% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்