Skip to main content

பூஸ்டர் ஷாட்கள் தேவையா? - ஐ.சி.எம்.ஆர். தலைமை இயக்குநர் டாக்டர் பால்ராம் பார்கவா பதில்!

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

icmr

 

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்குப் பரவலான அளவில் செலுத்தப்படுகின்றன. இந்தநிலையில் பல்வேறு நாடுகள், தங்கள் மக்களுக்குக் கரோனா தடுப்பூசியின் பூஸ்டர் ஷாட்களை செலுத்த தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலில், இந்தியாவில் மக்களுக்குப் பூஸ்டர் ஷாட்கள் செலுத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

 

இந்தச் சூழலில் சில மாதங்களுக்கு முன்னர், கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது டோஸின் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு திறன் குறித்து கண்டறிய சோதனை நடத்தப்பட்டுவருவதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்தது. அதேபோல் ஐ.சி.எம்.ஆரின் தலைமை இயக்குநர் டாக்டர் பால்ராம் பார்கவா, “மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவது விஞ்ஞான ஆராய்ச்சி கட்டத்தில் உள்ளது. மூன்றாவது டோஸின் செயல்திறன் இன்னும் அறியப்படவில்லை" என தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு விரைவில் கூடி, பூஸ்டர் ஷாட்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போதுவரை பூஸ்டர் ஷாட்கள் தேவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ஐ.சி.எம்.ஆரின் தலைமை இயக்குநர் டாக்டர் பால்ராம் பார்கவா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்துவதும், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வதும்தான் அரசின் தற்போதைய முன்னுரிமை. மேலும், கரோனாவுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி தேவை என்பதற்கு இதுவரை எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை” என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்