Skip to main content

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலை! மருத்துவர் குடும்பத்தில் சோகம்! 

Published on 21/06/2022 | Edited on 21/06/2022

 

Nine Members passed away in Mumbai Doctor family

 

மகாராஷ்டிரா மாநிலம், சாங்கிலி மாவட்டம், மீரஜ் தாலுகா மய்சால் பகுதி அம்பிகா நகரில் வசித்து வந்தவர் மாணிக் எல்லப்பா. இவர் கால்நடை மருத்துவர். மாணிக் எல்லப்பா வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் இவரது தம்பி போபட் எல்லப்பா. பள்ளிக்கூட ஆசிரியர். இவர்கள் வசித்து வந்த வீடுகள் நேற்று காலை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மீரஜ் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

 

அந்தத் தகவலின் அடிப்படையின் அங்கு விரைந்துவந்த காவல்துறையினர், மாணிக் எல்லப்பா வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 2 வீட்டிற்குள்ளும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பிணமாக கிடந்தனர். இதில் 3 பேர் ஒரே இடத்திலும், மற்றவர்கள் வீட்டில் ஆங்காங்கேயும் பிணமாக கிடந்தனர். 9 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் மாணிக் எல்லப்பா, அவரது தாய் அக்தை, மனைவி ரேகா, மகள் பிரதிமா, மகன் ஆதித்யா, மருமகன் சுபம் எனவும், மற்றொரு வீட்டில் இறந்து கிடந்தவர்கள் ஆசிரியர் போபட், அவரது மனைவி அர்ச்சனா, மகள் சங்கீத் எனவும் தெரியவந்தது. மேலும், அவர்கள் 9 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர்கள் மரணம் குறித்தான காரணம் தெரியவரும் என்றனர். இந்தச் சம்பவத்தால் அவர்களது உறவினர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்