Skip to main content

ஆளுநர் ஆர்.என். ரவியின் விழாவை புறக்கணித்த பத்திரிகையாளர்கள்!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

rn ravi

 

நாகாலாந்தின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, தற்போது தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வரும் 18ஆம் தேதி தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்கவிருக்கிறார். இந்தநிலையில், நாகாலாந்து அரசு சார்பில் அதிகாரப்பூர்வ பிரிவு உபசார விழா நேற்று (15.09.2021) நடைபெற்றது.

 

இந்த விழாவை நாகாலாந்து மாநில பத்திரிகையாளர்கள் புறக்கணித்துள்ளனர். ஆர்.என். ரவி நாகாலந்தின் ஆளுநராக இருந்த காலத்தில், அவர் பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் முழுவதுமாக புறக்கணித்துவந்தார். இதனையடுத்து நாகாலாந்தின் கோஹிமா பிரஸ் கிளப், ஆர்.என். ரவியின் பிரிவு உபசார விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்தது.

 

மேலும் கோஹிமா பிரஸ் கிளப், இதுதொடர்பாக நாகாலாந்து ஊடகங்களுக்கும் கடிதம் எழுதியது. இதனையடுத்து நாகாலாந்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் ஆர்.என். ரவியின் பிரிவு உபசார விழாவைப் புறக்கணித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்