Skip to main content

மேற்குவங்க நகராட்சித் தேர்தல்: திருணாமூல் காங்கிரஸ் அமோக வெற்றி!

Published on 17/08/2017 | Edited on 17/08/2017
மேற்குவங்க நகராட்சித் தேர்தல்: திருணாமூல் காங்கிரஸ் அமோக வெற்றி!

மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆகஸ்ட் 13-ல் நடைபெற்ற நகராட்சித் தேர்தலில், திருணாமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இடதுசாரி கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

கடந்த வாரம் மேற்கு வங்கம் மாநிலத்தில், கடந்த வாரம் ஏழு நகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தமுள்ள 148 வார்டுகளில் திருணாமூல் காங்கிரஸ் 140 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 6 வார்டுகளிலும், இடது முன்னணி கட்சி ஒரு வார்டிலும் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தமுள்ள ஏழு நகராட்சிகளில், எதிர்க்கட்சிகள் மூன்று நகராட்சிகளில் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியவில்லை.

ஹல்தியா நகராட்சியில் மொத்தமுள்ள 29 வார்டுகளிலும், துர்காப்பூரில் உள்ள 43 வார்டுகளிலும், கூப்பர் கேம்ப் நகராட்சியின் 12 வார்டுகளிலும் திருணாமூல் காங்கிரஸ் தரப்பில் களமிறங்கிய வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த வெற்றி முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கொண்ட மேம்பாட்டுப் பணிகளால் கிடைக்கப் பெற்றவை என திருணாமூல் காங்கிரஸ் கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்