Skip to main content

பணமழையில் நனைந்த ஜாம்நகர் மக்கள்... தெருக்களில் குவிந்த ரூ.90 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள்...

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

வடஇந்தியாவில் கோவில் திருவிழா மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் நடக்கும் கச்சேரிகளில் பணத்தை வாரி இரைப்பது வாடிக்கையான ஒன்று. ஆனால் குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் நடந்த மணமகன் ஊர்வலத்தில் சுமார் 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் வாரி இரைக்கப்பட்டுள்ளன.

 

moner shower in jamnagar wedding

 

 

குஜராத்தின் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ரிஷிராஜ்சிங் ஜடேஜா, ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். கடந்த 30ம் தேதி நடைபெற்ற இவரின் திருமணத்தின் போது, சேலா பகுதியின் முக்கிய சாலையில் மாப்பிள்ளை ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தின் போது ரூ.90 லட்சம் மதிப்புள்ள 10 ரூபாய் முதல் ரூ.2,000 வரை கட்டுக்கட்டாக மக்கள் மீது வாரி இரைக்கப்பட்டது. பின்னர் மணமகன் ரிஷிராஜும், மணமகளும் ஹெலிகாப்டரில் பறந்து மண்டபத்துக்கு வந்தனர். அதன்பின் திருமண விழாவில் ரிஷிராஜின் அண்ணன் மணமக்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான காரை பரிசளித்துள்ளார். அதேபோல இந்தத் திருமணத்தில் வசூலான நன்கொடைகள் கோசாலைக்கு தானமாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்