Skip to main content

தப்லீக் ஜமாத் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து...

Published on 27/04/2020 | Edited on 27/04/2020

 

mohan bhagawat about thablighi jamaat

 

 

டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் கூட்டத்தை மையப்படுத்தி மொத்த சமூகத்தையும் குறை சொல்வது தவறு என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். 

கடந்த மாத தொடக்கத்தில் தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தில் நடந்த தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இந்தோனேசியா, தாய்லாந்து, உட்பட உலகின் பல இடங்களிலிருந்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள மக்கள் வந்திருந்தனர். இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ள சூழலில், தப்லீக் ஜமாத் இமாம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் இதுகுறித்து மறைமுகமாகப் பேசியுள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், "ஒரு சிலர் செய்த தவறுக்காக மொத்த சமூகத்தையும் குறை சொல்ல முடியாது. மேலும் பாரபட்சம் இன்றி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உதவி செய்ய வேண்டும். 130 கோடி இந்தியர்களும் ஒன்றே, நாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். குறிப்பிட்ட அந்த சமூகத்தைச் சேர்ந்த மூத்தவர்கள் மக்கள் மனதில் உள்ள தவறான புரிதல் குறித்துப் பேசி புரிய வைக்க முன்வர வேண்டும்" எனத் தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்