Skip to main content

'நைஸ்' தாக்குதல்; பிரதமர் மோடி கண்டனம்...

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

modi condemns nice incident

 

பிரான்ஸ் நாட்டை உலுக்கியுள்ள தேவாலயத்தில் நடைபெற்ற கத்திக் குத்து தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

பிரான்ஸில் உள்ள 'நைஸ்' நகரின் தேவாலயத்தில் நேற்று பிரார்த்தனை நடந்துகொண்டிருந்த போது, கத்தியுடன் நுழைந்த நபர், அங்கிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினார். இதில் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதில், 45 வயது மதிக்கத்தக்க வின்சென்ட் லோக்ஸ் என்பவர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் இறந்தார். மேலும், பெண் உட்பட இரண்டு பேர் கழுத்துப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டுப் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். தாக்குதல் குறித்த தகவல் கிடைத்த போலீஸார் தேவாலயப் பகுதிக்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்ய முயன்றனர். ஆனால், அந்த நபர் ஒத்துழைக்காததால், அவரை சுட்டுப் பிடித்தனர். பிறகு நடைபெற்ற விசாரணையில் தாக்குதல் நடத்தியது 21 வயது மதிக்கத்தக்க வடக்கு ஆப்பிரிக்காவின் துனிசியாவைச் சேர்ந்த பிரஹிம் அவுசவுய் என்ற நபர் எனத் தெரியவந்துள்ளது. 

 

பிரான்ஸ் நாட்டை உலுக்கியுள்ள இந்த கத்திக் குத்துத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த பிரதமர் மோடியின் பதிவில், "நைஸ் தேவாலயத்தில் நடைபெற்ற தாக்குதல் உட்பட பிரான்சில் அண்மையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், பிரான்ஸ் மக்களுக்கும் எங்கள் ஆழ்ந்த மற்றும் மனமார்ந்த இரங்கல். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா பிரான்ஸுடன் துணை நிற்கும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்