Skip to main content

கல்வி, மருத்துவமனையில் செலவிட வேண்டிய தொகையை மோடி விளம்பரத்திற்கு செலவிடுகிறார்... மாயாவதி

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

உத்தரப் பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் அரசாங்கம், மக்களின் பணத்தை கல்வி, மருத்துவமனை போன்ற விஷயங்களில் செலவிட வேண்டும். ஆனால் பிரதமர் மோடி ரூ.3,044 கோடியை விளம்பரத்திற்காக செலவு செய்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

 

mayawati

 

மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்ததில், ''வறுமையை ஒழிப்பது, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய இரண்டும்தான் மிகப்பெரிய பிரச்சினையாக இந்தத் தேர்தலில் உள்ளது. ஆனால், பிரதமர் மோடி தனது அரசின் தோல்வியை மறைப்பதற்காகவும் மக்களைத் திசை திருப்புவதற்காகவும் பழைய விஷயங்களைக் கொண்டு வருகிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
 

மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.உத்தரப் பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் ஒரு அரசாங்கத்தின் நிதியை கல்வி, மருத்துவமனையின் தேவைக்காக பயன்படுத்த வேண்டும். ஆனால், பாஜக அரசு மக்கள் நலத் திட்டங்களைவிட தனது கட்சியின் விளம்பரத்திற்காக ரூ. 3,044 கோடியை செலவிட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்